என்ன முறைப்பு...போ..வங்கதேச வீரரிடம் மோசமாக சண்டையிட்டுக்கொண்ட இலங்கை பந்துவீச்சாளர்
டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இலங்கையின் லஹிரு குமாரா மற்றும் வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் மைதானத்தில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் இலங்கை, வங்கசே அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் படிப்படியாக ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினர்.
பவர் பிளேவின் கடைசி ஓவரில் லஹிரு குமார் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஷனாகாவிடம் கேட்ச் ஆனார் லிட்டன் தாஸ் (16).
அவர் ஆட்டமிழந்தவுடன் லிட்டன் தாஸை நோக்கி லஹிரு குமாரா ஆக்ரோஷமாக பேசி நடந்தார்.லிட்டன் தாஸும் பதிலுக்குக் கடுமையாகப் பேச வாக்குவாதம் ஏற்பட்டது.
முகமது நைம் வாக்குவாதத்தை விலக்கிவிட குமாரைத் தள்ளினார். இதன்பிறகு, இலங்கை வீரர்கள், நடுவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பி வைத்தனர்.
எனினும், லிட்டன் தாஸை பேட்டை உயர்த்தி எதையோ சொல்ல குமாரா மீண்டும் ஆக்ரோஷமாக சண்டையிட முற்பட்டார்.
இதனால், ஆட்டத்தின் நடுவே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.ஏற்கெனவே, நிடாஹஸ் தொடரில் இலங்கை, வங்கதேச வீரர்கள் மோசமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Exchange of words between Lahiru kumara & Litton das#SlvsBan pic.twitter.com/Wfy85BlveF
— RISHI (@RISHIKARTHEEK) October 24, 2021

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

CWC 6: அரிவாளுடன் வந்து குக்குகளை மிரள விட்டு புகழ்- 90 நிமிடத்தில் டாஸ்க்கை முடித்தவர் யார்? Manithan
