கடனை செலுத்த கால அவகாசம் கேட்கும் இலங்கை அரசு..!

Srilanka Country Loan Other Repay Asking
By Thahir Apr 12, 2022 07:18 AM GMT
Report

பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளது இலங்கை அரசு.

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் கடன்களைக் கேட்டு நெருக்கடி தர வேண்டாம் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார மறுசீரமைப்பு காலம் முடியும் வரை,கடன்களையும்,வட்டியையும் செலுத்த இயலாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டில் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.இதனால் அந்நாட்டில் பதற்றம் தொடர்ந்து வருகிறது.

இதையடுத்து வெளிநாடுகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த இலங்கை கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.