இலங்கை கடற்படையின் அத்துமீறல்: மத்திய மீன்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு

meet cm ops
By Jon Jan 22, 2021 01:01 PM GMT
Report

மத்திய மீன்வளத்துறை அமைச்சரான கிரிராஜ் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த 18ம் தேதி மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வில் ஆகிய நான்கு பேரும் கரைக்கு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், நால்வரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நால்வரும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்தது தெரியவந்தது, இலங்கை கடற்படையின் இத்தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே இன்று முதல்வர் இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் குறித்து முக்கியமாக விவாதித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.