பிரபல இலங்கை தமிழ் நடிகர் தூக்கிட்டு தற்கொலை
police
dead
wife
serial
By Jon
இலங்கை தமிழரும், பிரபல நடிகருமான இந்திரக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இந்திரக்குமார், தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் படம்பார்த்து விட்டு மதனகோபாலபுரத்தில் தன்னடைய நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
திடீரென அவர் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.