லிப் லாக் சீன்; நோ சொன்ன ஸ்ரீகாந்த் - ஆனால், கட்டாயப்படுத்திய மனைவி!
நடிகர் ஸ்ரீகாந்த் தனது தொழில் வாழ்க்கை குறித்து பல தகவல்களை மனம் திறந்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த். ஜன்னல் மரபு கவிதைகள் என்ற சீரியலின் மூலம் அறிமுகமாகி சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

ரோஜா கூட்டம் படத்தின் மூலம்தான் நாயகனாக களமிறங்கினார். அந்தப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால் அடுத்தடுத்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
இதற்கிடையில், வந்தனா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளது. இறுதியாக காபி வித் காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், கோபத்தை உள்ளே வைத்துக் கொள்ளாமல் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர் நான். தொடக்கத்தில் பெரும் வெற்றிகள் கிடைத்தன.
காபி வித் காதல்
தோல்வியை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. அது நம்மை மட்டுமே பாதிக்கிறது என்பதை பின்னர் உணர்ந்தேன். என் மனைவி மூன்று குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார். நான் மூன்றாவது குழந்தை. நாங்கள் மிகவும் நட்பாக இருக்கிறோம். சண்டை வரும் போது நாங்கள் இருவரும் வெவ்வேறு அறைகளுக்குச் செல்வோம்.

காஃபி வித் காதல் படத்தில் ஒரு லிப் லாக் காட்சி உள்ளது. நான் எதிர்த்தேன். இயக்குனர் சுந்தர் சி சார் மற்றும் பலர் என் மனைவியிடம் பேசி அனுமதி வாங்கினர். நீ செய் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan