மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளை பாராட்டும் ரசிகர்கள்! ஏன்?
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றார். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவரும் நடிப்புத் துறைக்குள் என்ட்ரியானார். வரும் 11ம் தேதியன்று அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி மொழி படமான ‘ரூஹி’ திரைக்கு வெளிவர இருக்கிறது.
இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் திரையிடப்பட்டுள்ளது. அந்த முன்னோட்ட காட்சிக்கு தனது உதவியாளரை குடும்பத்தினருடன் அழைத்திருந்தார் நடிகை ஜான்வி. அதிலும் உதவியாளரின் குழந்தையை கட்டி அணைத்தபடி போஸும் கொடுத்திருக்கிறார் அவர். இது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு பகிரப்பட்டது.
அப்போது நெட்டிசன்கள் பலர் ‘உங்க அம்மாவின் வளர்ப்பு அருமை” என ஜான்வியின் செயலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.