சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் நடக்கும் அதிசயம்: பரவசம் அடைந்த பக்தர்கள்

temple hindu thiruthani
By Jon Feb 05, 2021 05:01 AM GMT
Report

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி திருமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பக்தர்கள் மனமுறுகி வேண்டும் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பதால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். அதுமட்டுமின்றி மலை உச்சியில் உள்ள கோயில் வரை செல்ல வாகனங்களும் வசதியாக இருப்பதால் தினந்தோறும் சுற்றுலா தலம் போன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் சமீப நாட்களாகவே, கூட்டம் கூட்டமாக மயில்கள் கோயில் வனப்பகுதியில் சுற்றி வருவதுடன், மூலவர் சன்னதி, கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், சிவன் சன்னதியிலும் வலம் வருகின்றன. மிக முக்கியமாக கோயிலில் வளரும் சேவல்களுடன் சர்வசாதாரணமாக நண்பர்களை போன்று மயில்கள் பழகுகின்றதாம்.

இதுமட்டுமா, பக்தர்களை கண்டு பயந்து செல்லாமல் மயில்கள் இயல்பாக இருப்பதை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி விடுகின்றார்களாம். தினசரி இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் அதிகம் கூடுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.