இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு

By Irumporai Oct 18, 2022 03:14 AM GMT
Report

இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

புக்கர் விருது

இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து இந்த நாவல் அமைந்துள்ளது. புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு | Sri Lankas Shehan Karunatilaka Wins Booker Prize

இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் எழுதிய புத்தகத்துக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. புக்கர் பரிசை பெறும் இரண்டாவது இலங்கை எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தேமன் கால்கட் என்பவர் “The Promise” என்ற நாவலுக்காக இந்த விருதை பெற்றார். இந்தியாவை சேர்ந்தவர்களில் 2008-ம் ஆண்டு அரவிந்த் அடிகா, 2006-ம் ஆண்டு கிரண் தேசாய், 1997-ம் ஆண்டு அருந்ததி ராய் ஆகியோர் புக்கர் பரிசை வென்றுள்ளனர்.