நம்பிக்கையில்லா தீர்மானம் : தப்பினார் இலங்கை அதிபர்

1 மாதம் முன்

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ந்தேதி விலகினார்.

அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்த சூழலில் இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணும் முழு நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ரணில்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் காலை கூடியது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கொண்டு வந்த தீர்மானத்தை 68 பேர் ஆதரித்த நிலையில் 119 பேர் எதிராக வாக்களித்தனர். இலங்கை அதிகர் கோத்பய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.

அவசர கதியில் அதிபர் கோத்தபயவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எம்.பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை அதிபர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்கலாமா என வாக்கெடுப்பில் ஆளும் அரசு தரப்பு வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுத்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.