இலங்கை கலவரம் : வாக்குமூலம் அளிக்க தயார் , முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே

Mahinda Rajapaksa
By Irumporai May 21, 2022 09:52 AM GMT
Report

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ராஜ பக்சேவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு கலவரம் முண்டது.

இதில் 9 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் மற்றும் மகிந்த ராஜபக்சே, முன்னாள் மத்திரிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.  

இலங்கை கலவரம் : வாக்குமூலம் அளிக்க தயார் , முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே | Sri Lankan Violence Ready To Confess

இதையடுத்து மகிந்த ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் தலைநகர் கொழும்பில் இருந்து திரிகோணாமலை கடற்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கையில் நடந்த வன்முறை குறித்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரிடம் எந்த நேரத்திலும் நான் வாக்குமூலம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார். இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21-வது திருத்தச்சட்டத்தின் மூலம் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை நிரந்தரமாக நீக்குவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை கலவரம் : வாக்குமூலம் அளிக்க தயார் , முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே | Sri Lankan Violence Ready To Confess

இரட்டைக்குடியுரிமை பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களும் ரத்து செய்யப்படும். பாராளுமன்ற உறுப்பினராக உள்ள முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவின் இரட்டைக்குடியுரிமையும் நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.