இலங்கை போரால் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் ஈழத்தமிழர்கள் - நெஞ்சை உருக்கும் காட்சிகள்
இலங்கை போரால் அந்நாட்டில் உணவுக்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர் ஈழத்தமிழர்கள்.
வாழ வழியில்லாமல் தவிக்கும் தமிழர்கள்
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கோட்டபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பெறுப்பேற்றார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த ஈழத்தமிழர்களின் நிலை பெரும் துயராக உருவெடுத்துள்ளது.

கடந்த கால குண்டு வீச்சில் உடல் ஊனமாகி வேலைக்கு கூட செல்ல வழியில்லாமல் கடலை காட்டில் கஷ்டப்படும் காட்சிகள் நெஞ்சை ரணமாக்குகிறது.
பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் வாட்டி வதைத்து வரும் நிலையில், மற்றொரு புறம் இனப்படுகொலையால் நடந்த தாக்குதலில் தங்களது கை, மற்றும் கால்களை இழந்து தள்ளாடி கொண்டு இருக்கும் பெண்கள் மண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கை மற்றும் கால்களை இழந்த பெண் ஒருவர் பேசுகையில், அத்தியாவசிய பொருட்கள் வசதி படைத்தவர்களுக்கு தான் வழங்கப்படுகிறது. ஏழைக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை என்றார்.
பட்டினியால் வாடும் அவலம்
வவுனியாவில் உள்ள கிராமத்தில் இடம்பெயர்ந்த சரேஜா என்வர் மரக் குச்சிகளை கொண்டு மண்ணால் வீடு ஒன்றை எழுப்பி அதில் வாழ்ந்து வருகிறார்.

பொருளாதார நெருக்கடியால் கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் தன்னுடைய பச்சிளம் குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

யுத்தத்தால் வாழ்வாதரம் இழந்த அவர்கள் பொருளாதார நெருக்கடியாலும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்கள் தங்கள் பசியை ஆற்ற ஈறத்துணியை மூடி நிகழ்கால உலகை ஏமாற்றி வருகின்றனர்.
பட்டினியால் வாடி வரும் ஈழத்தமிழர்களின் நிலை நெஞ்சை ரணமாக்குகிறது.அவர்களின் வாழ்க்கையில் விரைவில் விடியல் பிறக்கும் என்று நம்புவோம்