இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

Minister Gingee K.S.Masthan Sri Lankan Refugees
By Thahir Jul 24, 2021 08:54 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். 

இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்! | Sri Lankan Refugees Minister Gingee K S Masthan

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதியை ஆய்வு செய்தார், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் "தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டி தரப்படும், அதிமுக சரியாக ஆட்சி புரியததால் மக்கள் திமுகவை தேர்வு செய்துள்ளனர், 2 மாதங்களில் வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்து உள்ளனர், 32 பேரில் 30 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13,553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு வெளியே வசித்து வருகிறது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும்" என கூறினார். பின்னர் கொரோனா தடுப்பூசி மையத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளிடம் கொரோனா தடுப்பூசி குறித்து பேசினார் பொதுமக்கள் மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.