இலங்கை அகதிகளுக்கு சிறப்பு திட்டம் : வழக்குகள் விரைந்து முடிக்க ஆணை - முதலமைச்சர்

MK Stalin Sri Lankan Refugee
By Thahir Aug 27, 2021 07:20 AM GMT
Report

இலங்கை அகதிகளின் முகாம்களில் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் முகாம்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர் கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில் சில அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் இன்று வெளியிட நான் விரும்புகிறேன்.

இலங்கை அகதிகளுக்கு சிறப்பு திட்டம் : வழக்குகள் விரைந்து முடிக்க ஆணை - முதலமைச்சர் | Sri Lankan Refugee Mk Stalin

இலங்கை நாட்டில் வாழும் தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்திற்குப் பிறகு, கடல் கடந்து தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கினார்கள். அத்தகைய தமிழ் மக்களை அன்று முதல் இன்று வரையிலும் நாம் அரவணைத்துக் காப்பாற்றி வருகிறோம்; அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கி வருகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற தருணங்களில் எல்லாம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே, கடந்த 1997-1998 ஆம் ஆண்டில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, 2 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3 ஆயிரத்து 594 புதிய வீடுகள், தலா 5 ஆயிரத்து 750 ரூபாய் செலவில் கட்டிக் கொடுக்கப்பட்டன.

மேலும், இதர உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதற்கு 2 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

1998-1999 ஆம் ஆண்டில், தலா 7 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பீட்டில், 3 ஆயிரத்து 826 வீடுகள், 2 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன. கடந்த 2-11-2009 அன்று 'இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அடிப்படைத் தேவைகள்' குறித்த ஒரு ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நடத்தினார்கள்.