இலங்கை அதிபர் தேர்தல்; டலஸ் அழகபெருமா படுதோல்வி..!

Dullas Alahapperuma Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka
By Thahir Jul 20, 2022 07:39 AM GMT
Report

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகபெருமா 82 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

இலங்கையில் இன்று நாட்டின் 8-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் தொடங்கிய வாக்குப்பதிவில் 223 வாக்குகள் பதிவாகியது. 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட நிலையில்,2 எம்.பிக்கள் வாக்களிக்க வரவில்லை.

இதையடுத்து 219 வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் 134 வாக்குள் பெற்று ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல்; டலஸ் அழகபெருமா படுதோல்வி..! | Sri Lankan Presidential Election Dulles Lost

போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் 

ரணில் விக்ரமசிங்கே - 134 வாக்குகள்

டலஸ் அழகப்பெருமா - 82 வாக்குகள்

அனுரா குமார திசநாயக்க - 3 வாக்குகள் மட்டுமே பெற்றனர்.