இலங்கை அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
அதிபர் ரணில் விக்ரமசிங் பதவிக்காலம் நவம்பர் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இலங்கை
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். 2022 ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வன்முறை கலவரங்கள் வெடித்தனர் .
இதனால் அதிபர் ராஜபக்சே பதவி விலகினார். இதனை தொடர்ந்து 2022-ல் பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக குணவர்த்தனவும் பதவியேற்றனர். தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங் பதவிக்காலம் நவம்பர் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதிபர் தேர்தல்
இந்த நிலையில் , இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.