தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை

Tamil nadu Sri Lanka Navy
By Thahir Dec 18, 2022 12:54 PM GMT
Report

எல்லைக்குள் வராமல் இருக்க தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டிள்களை கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் 

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

தமிழக மினவர்கள் கச்சத்தீவை தாண்டிய போது ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை எல்லைக்குள் வராமல் பகல் நேரத்தில் விரட்டியடித்துள்ளனர்.

Sri Lankan Navy attacked Tamil Nadu fishermen

மீண்டும் மீனவர்கள் மாலை தனுஷ்கோடி பகுதியில் இருந்து மன்னார் பகுதிக்கு செல்ல முயன்ற போது 5 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லைக்குள் வரவிடாமல் கற்பள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடித்தனர்.