மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் - அதிரடியாக கைது செய்த இலங்கை கடற்படை

Indian fishermen Tamil nadu Sri Lanka Navy
By Thahir Mar 23, 2023 01:46 AM GMT
Report

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் கைது 

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் வயிற்று பிழைப்புக்காக மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

குறிப்பாக ராமேஸ்வரம்,புதுக்கோட்டை,ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அதிகளவில் மீன் பிடிக்க செல்கின்றனர்.

Sri Lankan Navy arrested Tamil Nadu fishermen

இந்த நிலையில், மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

இதனிடையே இன்று காலை நெடுந்தீவு அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.