நெருக்கடியில் இலங்கை அரசுக்கான ஆதரவு வாபஸ் : இ.தொ.கா அறிவிப்பு

Srilanka srilankacriscis
By Irumporai Apr 05, 2022 05:52 AM GMT
Report

பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு. இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சமுதாய உட்கட்டமைப்பு இணை அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்தார்.

ஜீவன் தொண்டமானுடன் எம்பி மருதப்பாண்டி ராமேஸ்வரனும் சுயேட்சையாக செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களைஇ நடத்தி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியால் ராஜபக்ச அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நெருக்கடியில் இலங்கை  அரசுக்கான ஆதரவு வாபஸ் :  இ.தொ.கா அறிவிப்பு | Sri Lankan Government Withdrawn Cwc Announcement

இவ்வாறான பரபரப்பான சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கேபினட் அமைச்சர்கள் 26 பேர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொணடார். மேலும்,மத்திய வங்கி ஆளுநரும் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன்பின்னர் இலங்கை பிரதமர் கோட்டாபய ராஜபக்சே 4 புதிய இடைக்கால அமைச்சர்களை நியமித்தார். அடுத்தடுத்து இந்த பரபரப்பான அரசியல் சூழலில், இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடும் நிலையில், பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.