இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா : சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Sri Lanka Parliament Gotabaya Rajapaksa Sri Lankan political crisis
By Irumporai Jul 15, 2022 05:01 AM GMT
Report

இலங்கையின் அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு நாடாக தப்பி ஓடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

பதவி விலகிய கோத்தபய

இவ்வாறு நெருக்கடி முற்றியதை தொடர்ந்து இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று விலகினார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அவர் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா : சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | Sri Lankan Gotabaya Rajapaksas Resignation

கோத்தபய ராஜினாமா செய்த தகவலை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தும் உறுதி செய்துள்ளார். இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சபாநாயகர்.

அதிகாரபூர்வ அறிவிப்பு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் தொடர்பாக குழப்பம் நிலவி வந்த நிலையில் சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா : சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | Sri Lankan Gotabaya Rajapaksas Resignation

இலங்கையில் 8-வது அதிபதி கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா கூறியுள்ளார். இலங்கை மக்களின் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.