பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் ஆஸ்திரேலியாவில் கைது
இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா சிட்னி போலீசாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குணதிலகா கைது
இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா இலங்கை அணிக்காக ஒரு நாள் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கான போட்டியில் இலங்கை தோல்வியடைந்தது.
இந்த போட்டிக்கு பிறகு குணதிலாக கைது செய்யப்பட்டார் ,இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சிட்னி போலீசார் அளித்துள்ள தகவலின் படி , குணதலிகா டேடிங் ஆப் மூலமாக 29 வயது பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார்.
பாலியல் புகார்
இந்த நிலையில் கடந்த 2 -ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஹோட்டலில் இருவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர், அப்போது அந்த பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண் சிட்னி போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிட்னி போலீசார் குணலாதிகவை நேற்று கைது செய்தார்.
இந்த விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது