இலங்கையின் சுற்றுலா தூதராகும் ரஜினிகாந்த்? சந்திப்பால் வெடித்த சர்ச்சை
நடிகர் ரஜினிகாந்த்தை இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன் சந்தித்துப் பேசியது பேசுபொருளாகியுள்ளது.
இலங்கை தூதர்
இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக முன்னேறிவருகிறது. இந்நிலையில், தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்த்-ஐ சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கை துணை தூதர் ரஜினிகாந்திடம், நாட்டின் சுற்றுலாவுக்கு உதவி கோருமாறு கேட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு அழைப்பு
தொடர்ந்து, இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவ முன்வருமாறு ரஜினிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையெல்லாம் சுற்றிக்காட்ட இராமயணா டிரையல் என்கிற புதிய திட்டத்தை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil