இலங்கையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பொதுமக்கள் அதிருப்தி

Gotabaya Rajapaksa Sri Lankan protests Curfew Sri Lanka
By Petchi Avudaiappan May 16, 2022 10:10 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

இலங்கையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

 பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். ஆனாலும் மக்கள் போராட்டம் அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. 

பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பத்துக்கு தீர்வு ஏற்படும் வகையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதனிடையே அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்லலாம் என ஊரடங்கு தளர்த்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இலங்கையின் முக்கிய பண்டிகையான புத்த பூர்ணிமா விழாவிற்காக நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் இன்றிரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.