இலங்கைக்கு உதவ இந்தியா தயார் : அமைச்சர் ஜெய்சங்கர்
Jaishankar
BJP
Economy of Sri Lanka
By Irumporai
கடும் பொருளாதார நெருக்கடியில் சிகியுள்ள இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பயணம்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றடைந்தார், அப்போது கொழும்புவில் இலங்கை அதிபர் ரணிலை சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பின்போது , இரு நாடுகளின் உறவு நிலை, பாதுகாப்பு ,பொருளாதார நெருக்கடி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்தியா உதவி
இது குறித்து ஜெயசங்கர் வெளியிட்ட பதிவில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் தேவையான உதவிகளை இந்தியா வழங்கும். உட்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில், சுகாதாரம் முதலான துறைகளில் முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்