இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யா தான் காரணம் - அதிபர் ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன் போர்
உக்ரைன் போர் 200 நாட்களை கடந்தும் முடியாத தொடர்கதையாக உள்ளது. உக்ரைனில் தலைநகரை பிடிக்க முடியாத சூழ்நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.
உக்ரைனில் இதுவரை 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், பாரம்பரிய தளங்கள் ரஷிய துருப்புக்களால் அழிக்கப்பட்டுள்ளன என்றும், ரஷ்ய பீரங்கிகள் நாடு முழுவதும் 200 பாரம்பரிய இடங்களையும், 113க்கும் மேற்பட்ட தேவாலயங்களையும் அழித்துள்ளன என்றும், சமீபத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி போர் நிலவரம் குறித்து தெரிவித்திருந்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டது. இதனால், இலங்கை மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அமைதியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி. இதை உருவாக்கியதே ரஷ்யா தான் என்று அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சமீபத்தில் சியோலில் நடந்த ஆசிய தலைமைத்துவ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஞ்யா படையெடுப்பால், அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது" என்று பேசினார்.