இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை

Sri Lanka India
By Nandhini Jul 11, 2022 07:09 AM GMT
Report

இலங்கை பொருளாதாரம்

இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு

கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, இலங்கையில் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.

இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்

நேற்று முன்தினம் கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோத்த பய ராஜபக்சே கப்பல் மூலம் தப்பி சென்றுவிட்டார்.

போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

india

இந்தியா துணை நிற்கும்

இந்நிலையில், இலங்கை பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் -

இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறோம். இக்கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும். இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது. இலங்கையில் நெருக்கடி சூழலை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - விஜய் மல்லையாவிற்கு 4 மாத சிறைத் தண்டனை - சுப்ரீம் கோர்ட் அதிரடி