அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு : மீண்டும் இலங்கையில் போராட்டம்
இலங்கையில் அதிபர் தேர்தல்
இன்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் நாடாளுமன்றத்தில் உள்ள மொத்தம் 225 எம்.பிக்கள் வாக்களித்தனர். அதிபரை தேர்ந்தெடுக்க 113 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. மொத்தம் 219 வாக்குகள் மட்டும் செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன.
ரணில் விக்ரமசிங்கே
இதனையடுத்து, ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்ற நிலையில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மீண்டும் போராட்டம் இந்நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில்
இலங்கையில் மீண்டும் போராட்டம்
தொடங்கி இருக்கிறது. இலங்கை அதிபர் செயலகம் முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டிருக்கிறார்கள். ரணில் பதவி விலக கோரி அதிபர் செயலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
