இந்திய அணியை அடித்து துவைத்த இலங்கை அணி: மோசமான இலக்கை எட்டியதால் அதிருப்தி
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருஅணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்க இன்று 3வது போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்திப் யாதவ் 23 ரன்கள் எடுத்தார்.
அதேசமயம் இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.