இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல் : காரில் தப்பியோடிய அதிபர் கோத்தபயராஜபக்சே ? வெளியான வீடியோ

Sri Lankan protests Sri Lanka Government Gazette
By Irumporai Jul 09, 2022 08:22 AM GMT
Report

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

நெருக்கடியில் இலங்கை

இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.

நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வந்தனர்.

இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல் :  காரில் தப்பியோடிய அதிபர் கோத்தபயராஜபக்சே ? வெளியான  வீடியோ | Sri Lanka President Gotabaya Rajapaksa Flees

தப்பியோடிய அதிபர்

கோட்டாபய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியில் இருந்து விலகி உள்ளனர் இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து உள்ளனர் , இதனையடுத்து அதிபர் கோட்டபய தப்பி ஒடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய போராட்டம் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் நடைபெற்று வரும் நிலையில், கோத்தபய ராஜபக்ச பத்தரமுல்லையில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்கலைக்கழகங்கள் மாணவர் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் இலங்கையில் போராட்டக்கரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் இது வரை 33 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 2 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விலை உயர்ந்த ரேஜ் ரோவார் காரில் தப்பி ஒட்டியதா ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.