இந்திய மீனவர்களை கடலில் தள்ளிவிட்டு தாக்குதல் - இலங்கை கடற்படை அட்டூழியம்

Tamil nadu Sri Lanka Navy Puducherry
By Thahir Feb 26, 2023 08:00 AM GMT
Report

காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் மீது தாக்குதல் 

காரைக்கால் மாவட்டம் காசகொடியைச் சேர்ந்த அஞ்சப்பர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 26 ஆம் தேதி காரைக்கால் மீன்பிடி துரைமுகத்தில் இருந்து காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

Sri Lanka Navy attack on Indian fishermen

இந்த நிலையில் நேற்று இரவு கோடியக்கரை அருகே 11 மீனவர்களும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் அவர்களிடம் இருந்த மீன்கள், வலைகள், ஜிபிஎஸ் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இது மட்டுமல்லாமல் படகில் இருந்த மீனவர்களை கடலில் தள்ளிவிட்டு பல மணி நேரம் கொடுமைப்படுத்தியதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளர். இதையடுத்து மீனவர்கள் ஒருவழியாக தங்கள் படகுகளை எடுத்துக் கொண்டு காரைக்காலுக்கு தப்பி வந்துள்ளனர்.