மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் - 7 பேர் மருத்துமனையில் அனுமதி

By Thahir Oct 15, 2022 05:24 AM GMT
Report

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.

மீனவர்கள் மீது தாக்குதல் 

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் வலைகளையும் பறித்து சென்றுள்ளனர்.

Sri Lanka Navy attack on fishermen

தாக்கப்பட்ட காரைக்கால் மேடு கிராம மீனவர்கள் ஏழு பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை மீனவர்கள் மீதும் இலங்கை கடற்கரை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.