தொடரும் சோகம் : தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Tamil nadu Crime
By Irumporai Sep 20, 2022 02:40 AM GMT
Report

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது சோகத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழகத்தில் ராமேஸ்வரம் , நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்துவிட்டதாக இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர் கதையாக உள்ளது.

தொடரும் சோகம் :  தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த  இலங்கை கடற்படை | Sri Lanka Navy Arrested 8 Fishermen

மீண்டும் மீனவர்கள் கைது 

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே தமிழ்நாட்டை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விசைப்படகுடன் காரைநகருக்கு 8 மீனவர்களும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்துடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.