இலங்கையின் இந்த நிலைக்கு காரணம் இதுதான் : ஐ.நா. அறிக்கை

United Nations Sri Lanka Cabinet
By Irumporai Sep 08, 2022 04:42 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெறாமல் இலங்கை தப்பியதுதான் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணம் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார்.

நெருக்கடியில் இலங்கை 

இலங்கையில் நிலவி வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் ஒரு அறிக்கை தயாரித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர், ஜெனீவாவில் 12-ந் தேதி தொடங்கும் நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த நிலைக்கு காரணம் இதுதான்  : ஐ.நா. அறிக்கை | Sri Lanka Must Drift Towards Militarisation Un

அதில் கடந்த கால, நிகழ்கால மனித உரிமை மீறல்களுக்கு தண்டனையில் இருந்து இலங்கை தப்பிய செயல், பொருளாதார குற்றங்கள், ஊழல் ஆகியவைதான் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படை காரணங்கள். இந்த சவால்களை சமாளிக்க அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஐநா அறிக்கை

கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு, கடுமையான பாதுகாப்பு சட்டங்களை சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

அமைதியான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது. ராணுவமயமாக்கல் நடவடிக்கையை கைவிட வேண்டும். தண்டனையில் இருந்து தப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதுகாப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்களை பொருளாதார நெருக்கடியுடன் ஐ.நா. ஒப்பிட்டு பேசுவது இதுவே முதல் முறை ஆகும்