இலங்கையில் "அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு தொடரும்" என அறிவிப்பு

Sri Lanka Lockdown
By Thahir Aug 16, 2021 08:05 AM GMT
Report

உலக முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியது.இதனால் பல்வேறு நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கு மேல் உயர்ந்துள்ளதால், தொற்றுபரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இன்றிரவு முதல் இலங்கை முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இலங்கையில் "அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு தொடரும்" என அறிவிப்பு | Sri Lanka Lockdown

இதன்படி, இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.