சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இடம் பிடித்தது இலங்கை

Sri Lanka
By Thahir Oct 08, 2022 01:33 AM GMT
Report

சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை இடம் பிடித்துள்ளது.

17வது இடத்தை பிடித்தது

கோண்டே நாஸ்ட் டிராவலர் என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள் பட்டியலில் இடம் பிடித்தது இலங்கை | Sri Lanka Is Among The Best Countries To Visit

அதில் இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த நாடு 88.01 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட இலங்கை,

பொருளாதாரத்தில் மீளும் முயற்சியாக மீண்டும் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட முயன்றுவருவருகிறது. கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.