இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஆக்சிஜன் இலங்கைக்கு வந்தடைந்தது
India
Sri Lanka
Oxygen
By Thahir
இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஆக்சிஜன் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், சென்னையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றது.

இதில், சென்னையில் இருந்து 40 டன் மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிவந்த கப்பல், இலங்கையை வந்தடைந்து விட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.