டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - இலங்கை அணியில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐசிசி டி20
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் தொடர் முதலில் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. அங்கு நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று அறிவித்துள்ளது. இலங்கை அணியை சமாரி அத்தப்பட்டு கேப்டனாக வழிநடத்துகிறார்.
ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை அணியே, உலகக் கோப்பைத் தொடருக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சமாரி அத்தப்பட்டு (கேப்டன்), ஹர்ஷிதா சமரவிக்கிரம, விஷ்மி குணரத்னே, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சலா, உதேசிகா பிரபோதனி,
இலங்கை மகளிரணி
இனோஷி ஃபெர்னாண்டோ, அச்சினி குலசூர்யா, இனோகா ரணவீரா, ஷாஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா மற்றும் சுகந்திகா குமாரி இடம்பெற்றுள்ளனர் . மேலும் அணியில் இனோகா ரணவீரா மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியின் பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 66.64 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.