இலங்கையில் தொடர் கனமழை - வெள்ள நீரில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்...!

Sri Lanka
By Nandhini Dec 26, 2022 10:04 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இலங்கையில் தொடர் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இலங்கையில் தொடர் கனமழை

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, கண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ் தினமான நேற்று கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கண்டி ரெயில் நிலையம், அக்குரணை நகரம் உள்பட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளன. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். பல பகுதிகளில் கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கனமழை காரணமாக க்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.     

sri-lanka-heavy-rain