கடும் நெருக்கடியில் இலங்கை , தமிழகத்துக்கு அகதிகளாக படையெடுக்கும் பொதுமக்கள்
இலங்கையில் தற்போது பொருளாதாரநிலை கடும் பாதிப்பில் உள்ளது , மிக அத்தியவசியமான பொருட்கள் உயர்ந்துவருவதால் அங்கு வசிக்கும் குடிமக்கள் கடும் நெருக்கடியினை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு மேலும் 10 பேர் அகதிகளாக வந்துள்ளனர். மன்னார் பகுதியில் இருந்து நேற்று கைக்குழந்தையுடன் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி பகுதிக்கு வந்தனர்.
அவர்களை மீட்டு இந்திய கடலோர காவல்படை விசாரித்து வரும் நிலையில், வவுனியா பகுதியிலிருந்து மேலும் 10 பேர் தமிழகத்திற்கு அகதிகளாய் வந்துள்ளனர்.

மன்னார் பகுதியிலிருந்து திங்கட்கிழமை புறப்பட்டவர்களின் எஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக, நடுக்கடலில் கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் தவித்துள்ளனர்.
பின்னர் பல மணிநேர முயற்ச்சிக்கு பிறகு செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். இலங்கையில் ஏறபட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இது வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
மேலும் சிலர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக கடல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.