ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணிக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்து
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதற்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி நேற்று நடைபெற்று முடிந்தது.
இரு பிரிவுகளாக 6 அணிகள்
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் நேற்று மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி இலங்கை அணி அசத்தி இருக்கிறது.
இலங்கை அதிபர் ரணில் வாழ்த்து
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பால் இந்த சாதனை உருவாகியுள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்ட அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்கள், நிர்வாகத்திற்கும் பாராட்டு. இலங்கை எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலையிலும், ஒற்றுமையுடன் தாய்நாட்டின் வெற்றிக்காக செய்த இந்த அர்ப்பணிப்பு, ஏனைய துறைகளிலும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக ரணில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The ????????? of the #AsiaCup2022 ?
— ICC (@ICC) September 11, 2022
Congratulations, Sri Lanka ? pic.twitter.com/c73cmcaqNz