சி.எஸ்.கே. அணியின் உத்வேகம் இலங்கை அணிக்கு உதவியாக இருந்தது.. - இலங்கை கேப்டன் ஷனகா பெருமிதம்
சி.எஸ்.கே. அணியின் உத்வேகம் இலங்கை அணிக்கு உதவியாக இருந்தது என்று இலங்கை கேப்டன் ஷனகா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி நேற்று நடைபெற்று முடிந்தது.
இரு பிரிவுகளாக 6 அணிகள்
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் நேற்று மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி இலங்கை அணி அசத்தி இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் இலங்கை அணிக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேசியதாவது -
கடந்த 2021-ம் ஆண்டு இதே துபாய் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. அணி கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. சி.எஸ்.கே. முதலில் ஆடி இந்த வெற்றியை பெற்றது. இது என் மனதில் இருந்து வந்தது. இந்த விளையாட்டைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டோம்.
சி.எஸ்.கே. அணியின் உத்வேகம் இலங்கை அணிக்கு உதவியாக இருந்தது. ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த நாட்டில் விளையாடியது போல் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு கிடைத்தது.
இவ்வாறு அவர் பேசினார்.