6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணி - குஷியில் குத்தாட்டம் போட்ட வீரர்கள் - வைரலாகும் வீடியோ
பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி அபார வெற்றி அடைந்ததையடுத்து, குஷியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நடனமாடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி நேற்று நடைபெற்று முடிந்தது.
இரு பிரிவுகளாக 6 அணிகள்
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் நேற்று மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி இலங்கை அணி அசத்தி இருக்கிறது.
சமூகவலைத்தளங்களில் இலங்கை அணிக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
வைரலாகும் வீடியோ
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றிய குஷியில் இலங்கை அணி வீரர்கள் துள்ளி குதித்து உற்சாகத்தோடு நடனமாடி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The winning celebration by Sri Lanka. pic.twitter.com/ycpAvOho24
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 12, 2022