விதிமுறை மீறல்... - இலங்கை வீரர் சமிகா கருணாரத்னேவுக்கு ஒரு ஆண்டு விளையாட தடை - கிரிக்கெட் வாரியம் அதிரடி...!
விதிமுறைகளை மீறியதால், இலங்கை வீரர் சமிகா கருணாரத்னேவுக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதித்து கிரிக்கெட் வாரியம் அதிரடி காட்டியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி சமீபத்தில் நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.
2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து மெல்போர்னில் நடந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
வீரர் சமிகா கருணாரத்னே தடை
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு தடை விதித்திருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்திருக்கிறது.
சமிகா கருணாரத்னே தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டிருப்பதால், அவருக்கு தண்டனையுடன், 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.