எங்க உறவுல தேவையில்லாம 'மூணாவது நாடு' தலையிடுற வேலை வச்சுக்காதீங்க - காட்டம் காட்டிய சீனா
சீனாவே தங்களுடைய உண்மை நண்பன் என்றும், இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே முன் நின்று வழிநடத்திச் செல்லும் என்று, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழாவில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே தெரிவித்திருந்தார்.
இது மட்டுமல்லாமல் "சீனா எங்களது வரலாற்று ரீதியாக நட்பு நாடாகும். அந்த நீண்ட வரலாற்றில், சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்றும் தனது உரையில் அவர் கூறினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீனாவுக்கும்-இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவை அங்கீகரிக்கும் பொருட்டும், ஒரு நினைவு நாணயத்தை தாம் வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், இலங்கை - சீனா இரு நாடுகளின் உறவில் எந்த 3வது நாடு தலையிடக்கூடாது என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் 2 நாள் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இரு நாடுகளிடையிலான நட்பு இலங்கை- சீனா இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவுவதாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷிவுடனான சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார்.
இலங்கை- சீன நட்புறவில் 3ம் நாடுகளை குறிவைக்கவில்லை என்றும், இரு நாடு உறவுகளில் 3ம் நாடு தலையிடக்கூடாது என்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.