இலங்கையிலிருந்து கிளம்பியது சீன உளவு கப்பல் - வெளியான முக்கிய தகவல்
இலங்கை, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன உளவு கப்பல் இன்று மாலை சீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
சீன உளவு கப்பல்
சீனா கடந்த 1980ம் ஆண்டு யுவான் வாங் என்ற உளவு கப்பலை உருவாகியது. அதன் பிறகு 1986 -ல் இரண்டாம் தலைமுறை உளவு கப்பலையும் தற்போது அதி நவீன 3ம் தலைமுறை உளவு கப்பலான யுவான் வாங் 5 ஐ உருவாக்கியுள்ளது.
இந்தக் கப்பல் 222 மீட்டர் நீளமும் 25 புள்ளி 2 மீட்டர் அகலமுள்ள இந்த கப்பல் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த யுவான் கப்பல் நேரடியாக செயற்க்கை கோளுடன் இணைப்பில் இருக்கும் .
அதோடு இந்த கப்பலின் மூலம் சுமார் 750 கிலோமீட்டர் வரை உளவு பார்க்க முடியும் . அதாவது தற்போது இலங்கையில் இருந்த படியே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா வரை உள்ள நிலப்பரப்புகளை சீன கப்பல் உளவு பார்க்க முடியும்.

அனுமதி மறுத்த இலங்கை
சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 கப்பல், இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கடந்த 16ம் தேதி வந்தடைந்தது. முதலில் சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுக்கவில்லை, பின்னர் சீன அரசு கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இலங்கையிலிருந்து புறப்பட்ட சீன உளவு கப்பல்
இந்நிலையில், எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்தததை தொடர்ந்து இக்கப்பல் இலங்கையிலிருந்து கிளம்பி புறப்பட்டுச் சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.