அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி - ரசிகர்கள் உற்சாகம்
டி20 உலக்கோப்பை தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. அபுதாபியில் இன்று நடைபெற்ற 8வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் இலங்கை அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது.அந்த அணியில் நிஷன்கா 61 ரன்களும், ஹஸரங்கா 71 ரன்களும் விளாசினர். அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. கேப்டன் பால்பிரின் அதிகப்பட்சமாக 41 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 18.3 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் தீக்ஷனா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், இலங்கை அணி சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.இந்த தோல்வியின் மூலம் அயர்லாந்து அணி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.