442 மில்லியன் டாலர் பெறுமதிப்பிலான அதானி குழும முதலீடு.. - இலங்கையில் அங்கீகரிப்பு...!

Sri Lanka Gautam Adani
By Nandhini Feb 24, 2023 12:59 PM GMT
Report

அதானி குழுமத்தின் 442 மில்லியன் டாலர் காற்றாலை திட்டத்திற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது

மாபெரும் சரிவை சந்தித்த அதானி

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழும நிறுவனங்களை "வெட்கக்கேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டதை அடுத்து, பங்குகள் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதனையடுத்து, அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி சமீபத்தில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழந்துள்ளார்.

ரிசர்வ் வங்கி உத்தரவு

இதனையடுத்து, சமீபத்தில், அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குறித்தும், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன் பிறகு, அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்கள் வெளியானது.

எஸ்.பி.ஐ. வங்கி - ரூ.21,375 கோடியும், இண்டஸ்இண்ட் வங்கி - ரூ.14,500 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.7000 கோடி கடனை அதானி குழுமம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டது.

அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 24வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

sri-lanka-approves-adani-442-m-wind-energy-project

அதானி குழும முதலீடு இலங்கையில் அங்கீகரிப்பு

இந்நிலையில், 442 மில்லியன் டாலர் பெறுமதியான அதானி குழும முதலீடு இலங்கையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜியின் 442 மில்லியன் டாலர் காற்றாலை மின் திட்டத்திற்கு இலங்கை அரசு நேற்று ஒப்புதல் அறிவித்துள்ளது.

பணப்புழக்கம் இல்லாத முதல் பெரிய வெளிநாட்டு முதலீடு என்றால் அது இதுதான். கௌதம் அதானி தலைமையிலான வணிகப் பேரரசின் ஒரு பகுதியான அதானி கிரீன் எனர்ஜி, தீவின் வடக்கில் இரண்டு காற்றாலைகளை அமைக்கும் என்று இலங்கையின் முதலீட்டுச் சபை கூறியதாக AFP தெரிவித்துள்ளது.

"மொத்த முதலீடு $442 மில்லியனை எட்டும், மேலும் இரண்டு ஆலைகளும் 2025 ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டத்திற்கு மின்சாரம் வழங்கும்" என்று BOI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் கொழும்பில் 700 மில்லியன் டாலர் மூலோபாய துறைமுக முனைய திட்டத்தை இலங்கை அதானிக்கு வழங்கியதை அடுத்து இந்த திட்டம் வந்துள்ளது.