டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

srilanka cricket t20worldcup
By Irumporai Sep 12, 2021 11:08 PM GMT
Report

வரும் அக்டோபர் 17 தொடங்கி நவம்பர் 14 வரையில் ஓமன் மற்றும் அமீரகத்தில் 2021 டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு சர்வதேச கிரிக்கெட் அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ள தங்கள் அணிகளை அறிவித்து வருகிறது.


அந்த வகையில் தற்போது இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம் :

தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, அசலங்கா, பனுகா ராஜபக்ச, கமிந்து மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்ன, லஹிரு மதுஷங்க, துஷ்மந்த சமீரா, நுவன் பிரதீப் மஹேஷ் , பிரவீன் ஜெயவிக்ரம ஆகிய 15 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.