1 மணி நேரம் என்னை...இஸ்லாமிய பெண்ணுக்கு பிரபல ஹோட்டலில் நேர்ந்த கொடூரம்!
பிரபல உணவகம் ஒன்று மீது இஸ்லாமிய பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பிரபல ஹோட்டல்
தமிழகத்தில் மிகவும் பிரபலமான சைவ உணவகங்களில் முன்னணியான ஒன்று தான் கிருஷ்ணா பவன். இந்த உணவகத்தின் தரம் மற்றும் சுவைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதன் கிளைகள் பல ஊர்களிலும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீ கிருஷ்ணா பவன் உணவகத்துக்கு நபீஸா என்ற இஸ்லாமிய பெண் தனது குடும்பத்துடன் அங்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் முறையில் காத்திருந்த வாடிக்கையாளர்களை ஒருவர் பின் ஒருவராக இருக்கைக்கு அனுப்பியுள்ளது ஹோட்டல் நிர்வாகம்.
நபீஸாவும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இருக்கையை ரிசர்வ் செய்திருக்கிறார். ஆனால். இந்த ஹோட்டலின் மேனேஜர் அவரது பெயரை குறித்து கொள்ளாமல், நபீஸாவிற்கு முன் பின் வந்த வாடிக்கையாளர்களுக்கு மற்றும் இருக்கைகளுக்கு அனுப்பப்பட்டனரே தவிர,
பிரபல OYO ஹோட்டலில் ரகசிய கேமரா - நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்டி மிரட்டிய 4 பேர் கைது - அதிர்ச்சி சம்பவம்...!
நேர்ந்த அவலம்
நபீஸா குடும்பத்தினர் மட்டும் அங்கேயே காத்திருக்க வைத்துள்ளார்கள்.இது குறித்து 2 முறை மேனேஜரிடம் கேட்டும்கூட அவர் கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்த பலர் சாப்பிட்டு சென்ற பிறகு இருக்கைகள் காலியாக இருந்தும் அவர்களுக்கு இடம் தராமல் அலைக்கழித்துள்ளனர். ஒரு மணி நேரம் கழித்து நபீஸாவின் கணவர் சென்று கேட்ட பிறகு,
இவர்களுக்கு சீட் அளிக்கப்பட்டுள்ளது. அதைவிட கொடுமை, சாப்பாடு ஆர்டர் செய்தும் கொண்டு வந்து தருவதற்கு 1 மணி நேரமாகிவிட்டதாம். இதனால் கடும் கோபம் அடைந்த நபீஸா இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் பகிரங்கமாகவே தன்னுடைய பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில், பொதுவாக இந்து - முஸ்லீம் பாகுபாடு என்று சொல்லப்படுவதில் எல்லாம் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை.. ஆனால் அதை என்னுடைய வாழ்நாளில் சந்தித்தது போன்ற பாகுபாட்டை சந்தித்ததே இல்லை என்றும் தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்றும் வெளிப்படையாக தன்னுடைய பதிவில் குற்றம் சாட்டியிருக்கிறார்.