பந்துவீச்சில் மிரட்டிய சென்னை - அடிபணிந்த ஹைதராபாத்
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 134 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் இன்று விளையாடி வருகின்றது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், விருத்திமான் சாஹா நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதிகப்பட்சமாக சஹா 44 ரன்கள் விளாச மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சை பொறுத்தவரை அதிகப்பட்சமாக ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ட்வைன் ப்ராவோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.