‘’ என்னடா இது கேன் வில்லியம்சனுக்கு வ்ந்த சோதனை ‘’ தோற்றாலும் விடமாட்டாங்க போல
ஐபிஎல் தொடரில் விக்கெட் சர்ச்சையில் ஏமாந்த கேன் வில்லியம்சனுக்கு அடுத்த பிரச்சினை எழுந்துள்ளது. நேற்று புனே நகரத்தில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 210 /6 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 149 / 7 ரன்களை மட்டுமே அடித்து மோசமன தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் ஐதராபாத் அணியின் தோல்வியை விட, அதன் கேப்டன் வில்லியம்சனின் விக்கெட் பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது. பிரஷித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் வில்லியம்சன் தடுப்பாட்டம் ஆட முயன்றார்.
அப்போது பந்து எட்ஜாகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. சஞ்சு சாம்சன் டைவ் அடித்த போதும் அவரது கையில் இருந்த பந்து நழுவ, ஸ்லிப்பில் நின்றிருந்த தேவ்தத் பட்டிக்கல் கேட்ச் பிடித்தார்.
ஆனால் பந்து முதலில் தரையில் பட்டதா? அவர் கேட்ச் பிடித்தாரா என்ற குழப்பம் உருவானது. பல ஆங்கிளில் மூன்றாவது நடுவர் பார்த்த போதும், சரியான ஆதாரம் கிடைக்கவில்லை. இறுதியில் அவுட் என்ற முடிவை வழங்கினார்.
எனினும் பந்து முதலில் தரையில் தான் பட்டது என ரசிகர்கள் விமர்சனங்களை வீசி வருகின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்தே வில்லியம்சன் மீளாத நிலையில் அடுத்த அதிர்ச்சி வந்துள்ளது.
நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இதே அபராதம் விதிக்கப்பட்டது.
முதல் முறை என்பதால் அபராதத்துடன் விட்டுள்ளனர். இதே தவறை 2வது முறையாக செய்தால் கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதம், 3வது முறை செய்தால் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட கேப்டன் தடை செய்யப்படுவார்.
கடந்தாண்டு டேவிட் வார்னர் பிரச்சினையில் சிக்கியிருந்த ஐதராபாத் அணி, இந்தாண்டு புத்துணர்ச்சியுடன் நல்ல கம்பேக் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகவும் நம்பிக்கை வைக்கப்பட்ட வில்லியம்சன் 2 ரன்கள், திரிபாதி, நிகோலஸ் பூரண் ஆகியோர் டக் அவுட் என அடுத்தடுத்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.